பாலினக் குறியீடு
| |
---|---|
பாலினக் குறியீடு | |
ஒருங்குறியில் | U+2640 ♀ U+2642 ♂
U+26A5 ⚥ U+25B3 △ U+25A1 □ U+25CB ○ |
பாலினக் குறியீடு (gender symbol) என்பது உயிரியல்லான பால்பகுப்பையோ சமூகப் புனைவு சார்ந்த பாலினத்தையோ குறிக்கப் பயன்படும் படவரை அல்லது கீறல் வடிவக் குறியீடாகும். பால், பாலினம் ஆகியன 1950 களில் இருந்து தனிப்படுத்திச் சமூகவியலாகப் பிரித்துப் பார்க்கப்படுதல் முதலில் சமூகவியலில் 1950 களில் தோன்றி, பின்னர் உயிரியல், மருத்துவம், கால்வழியியல், தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம், பாலின அரசியல், பெயர்பாலினத் துணைப்பண்பாடு, அடையாள அரசியல் ஆகிய புலங்களில் பரவியது.
ஆண், பெண் பொதுவிடஒப்பனை அறைகளைக் குறிப்பிட 1960 களில் படவரைகள் பயன்படத் தொடங்கின.[1]
உயிரியலும் மருத்துவமும்
[தொகு]பாலினக் குறியீடு (gender symbol)என்பது, ஒரு உயிரினத்தின் பாலினத்தை அல்லது அதோடு தொடர்புடைய ஒன்றைக் குறிப்பிடுவதற்குப் பயன்படும் குறியீடு ஆகும். ஆண் ♂, பெண் ♀ என்னும் இரண்டு பாலினங்களைக் குறிக்கும் குறியீடுகள் சோதிடக் குறியீடுகளில் இருந்து பெறப்பட்டவை. ஆணுக்கான குறியீடு செவ்வாய்க் கோளையும், பெண்ணுக்கான குறியீடு வெள்ளிக் கோளையும் குறிக்கும் குறியீடுகள் ஆகும். [2] இந்தக் குறியீடுகள் மறுமலர்ச்சிக் காலத்திலிருந்தே மேற்கு நாடுகளில் பயன்பட்டு வருகின்றன. இரசவாதத்திலும், தனிமங்களை, குறிப்பாக இரும்பு, செப்பு ஆகியவற்றைக் குறிப்பதற்கும் இக்குறியீடுகள் பயன்பட்டன.[3] இக் குறியீடுகளை 1751 ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தாவரங்களில் செயல்படும் பாலினத்தைக் குறிப்பதற்கு கரோலசு லின்னேயசு பயன்படுத்தினார். [3] அவை தனி நோயாளியின் பால்பகுப்பைக் குறிக்க அறிவியல் வெளியீடுகளில் இன்றும் பயன்படுகின்றன.[4] என்றாலும், லறிவியல் வெளியீடுகளின் உணவு அட்டவணைகளில் ஆணுக்குச் சதுரத்தையும் பெண்ணுக்கு வட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.[5]
பாலினக் குறியீடுகளாக வடிவங்களைப் பயன்படுத்துதல் மானிடவியலின் சுற்றமுறை விளக்கப் படங்களில் இருந்து தோன்றியிருக்கலாம்;[6] அப்படங்களில் வட்ட வடிவம் பெண்ணையும் முக்கோனம் ஆணையும் சதுரம் ஆண் அல்லாதவர்களையும் அல்லது பெண் அல்லாதவர்களையும் அல்லது இரண்டும் அல்லாதவர்களையும் அதாவது அலிகளையும் குறிப்பிடும்.[7] சுற்ற உறவின் மிக முந்தைய வடிவம் 1871 ஆம் ஆண்டு சார்ந்தமாந்தக் குடும்ப குருதியுறவும் குருதிப் பாசமும் எனும் மார்கனின் நூலில் வரும் சுற்ற உறவுமுறையே ஆகும்.[8] டபுள்யூ. எச். ஆர். இரிவ்ரின் முறையில் ஆண்களைக் குறிக்க ஆங்கிலப் பெரிய எழுத்துகளும் பெண்களைக் குறிக்க ஆங்கிலச் சிறிய எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டன. இயற்கனிதவிய்லில் பகுதி ஆணையும் தொகுதி பெண்ணையும் குறித்தது.[9] பின்னர், சி. ஜி. செலிகும்ன் நடன விளக்கப் படத்தில், வட்ட உருவரை பெண்களையும் நீழலிட்ட வட்டம் ஆண்களையும் குறித்தது.[10]
சமூகவியல்
[தொகு]முதன்மைக் கட்டுரை: ஒப்பனை அறைகள்
பொது ஒப்பனை அறைகளைக் குறிக்க ஆண், பெண் படவரைகள் பயன்பட்டன.
-
செந்தர அமெரிக்க வரைகலைகள் நிறுவனம் குறியீடுகள்
-
AIGA அல்லாத பெண் ஒப்பனை அறைக் குறியீடு
-
AIGA அல்லாத ஆண் ஒப்பனை அறைக் குறியீடு
குறியீடுகளும் மரபுவகைகளும்
[தொகு]♂︎(ஆண்) and ♀︎(பெண்) என இருமை முறையில் பாலினம் குறிக்கப்படுகிறது . இந்தக் குறியீடுகள்ஆண்களும் பெண்களும் நிறைவேற்ற வேண்டிய மரபான பாலினப் பாத்திரங்களை சுட்டுகின்றன.
ஆண் குறியீடு (♂︎)
[தொகு]ஆண் குறியீடான (♂︎) செவ்வாயுடனும் உரோமப் போர்க் கடவுளுடனும் தொடர்பு படுத்தப்படுகின்றன[11] இதற்கு இணையான கிரேக்கப் போர்க்கடவும் ஆரிசு ஆவார். இந்தக் குறியீடுகள் போர்க்கடவுளின் குந்தத்தையும் கவசத்தையும் சுட்டுகின்றன[11]. குந்தமும் கேடயமும் பொதுவாக ஆண்பால் போராளியையும் காப்பாளியையும் சுட்டுகின்றன. ஆண்கள் தம் வலிமையாலும் போர் வல்லமையாலும் சார்ந்திருக்க செய்கின்றனர்.ஆண்கள் வீட்டின் வலிமையும் ஆண்மையும் காப்புதிறமும் உள்ளவராக எதிர்பார்க்கப்படுகின்றனர்[12]
இரசவாதத்தில்
[தொகு]தன் உருவாக்கத்தில் செவ்வாய் குறியீடு குந்தம் அல்லது அம்புடன் உள்ள இரும்புக் கேடயத்தைத்தோடு தொடர்புடையாதாக கருதப்பட்டது. இரும்பு போர்க்கருவியைச் சுட்டுவதாக பண்டைய உரோமர்கள் கருதினர். இந்த வலிமையான செந்நிறப் பொன்மம் (உலோகம்) செவ்வாய் எனும் செவ்வியல் கோள்களிலேயே ஆண்மைமிக்க கோளைக் குறித்தது.[13]
பெண் குறியீடு (♀︎)
[தொகு]பெண் குறியீடான (♀︎) உரோமரின் காதல் கடவுளாகிய வெள்ளியைக் குறித்தது.[11] இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் அப்புரோதைத்து ஆவார்.[14]. பெண் குறியீடு ஒரு கைக்கண்ணாடியைச் சுட்டுகிறது[11]. கைக்கண்ணாடி பொதுவாக பெண்களின் மரபான பான்மைகளாகிய செருக்கையும் அழகையும் குறிக்கும். வரலாற்றியலாக பெண்கள் மென்மையும் பாசமும் உள்ள பாத்திரமாக எதிர்பார்க்கப்படுகின்றனர். அண்மைக் காலப் பெண்கள் இந்த மரபு பாத்திரதில் இருந்து பெரிதும் மாறுபட்டு சமுகத்துக்கான அனைத்துப் பாத்திரங்களையும் ஏற்று பங்களிக்கின்றனர். These signs correlate with societal expectations of their assigned gender.
இரசவாதம் தொடர்பாக
[தொகு]தன் உருவாக்கத்தில், வெள்ளிக் குறியீடு கைப்பிடியுள்ள வெண்கலக் கண்ணாடியைக் காட்டுகிறது. இந்த வெள்ளி, நிலாவைத் தவிர, செவ்வியல் கோள்களிலேயே பெண்மைமிக்க கோளாகக் கருதப்பட்டது. பண்டைய காலத்தில் கண்ணாடிகளைச் செய்ய பரவலாகப் பயன்பட்டது.[15]
குறிப்புகள்
[தொகு]- ↑ Sex-segregated public bathrooms existed since at least the 1880s, originally labelled in writing. The stick-figure pictograms were popularized with their introduction by British Rail in the 1960s. The genius behind the stick figure toilet signs, BBC Future (2014): "One of the best early examples of intuitive global signs for public lavatories was that created for British Rail in the mid-1960s. [...] In the 1970s, the British example was developed on a more comprehensive basis in the United States. In 1974, the US Department of Transportation commissioned the American Institute of Graphic Arts to create a set of pictograms to be used throughout public transport networks whether road, rail, air or sea." "In Poland, meanwhile, you can come across lavatories indicating 'gents' with a triangle and 'ladies' with a circle, while in Lithuania men are represented by an inverted pyramid and women by a pyramid standing the right way up."
- ↑ Taylor, Robert B. (2016), "Now and Future Tales", White Coat Tales, Springer International Publishing, pp. 293–310, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-319-29055-3_12, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-29053-9
- ↑ 3.0 3.1 Stearn, William T. (May 1962). "The Origin of the Male and Female Symbols of Biology". Taxon 11 (4): 109–113. doi:10.2307/1217734. https://semanticscholar.org/paper/e3c883a4194b2bffb07fd09706f7e50a3fb447bc.
- ↑ Zhigang, Zhigang (25 September 2009). "A HIV-1 heterosexual transmission chain in Guangzhou, China: a molecular epidemiological study". Virology Journal (BioMed Central) 6 (148): Figure 1. doi:10.1186/1743-422X-6-148. பப்மெட்:19778458. "(Mars male gender symbol) indicates male; (female Venus gender symbol) indicates female".
- ↑ Schott, G D (24 Dec 2005). "Sex symbols ancient and modern: their origins and iconography on the pedigree". BMJ (British Medical Journal) 331 (7531): 1509–1510. doi:10.1136/bmj.331.7531.1509. பப்மெட்:16373733. பப்மெட் சென்ட்ரல்:1322246. http://www.bmj.com/content/331/7531/1509. பார்த்த நாள்: 31 December 2015.
- ↑ "Kin Diagrams". www.umanitoba.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Kin Diagrams". www.umanitoba.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ Morgan, Lewis Henry (1870). Systems of consanguinity and affinity of the human family. University of California Libraries. [Washington, Smithsonian Institution.
- ↑ Wilson, Ara (2018-07-24). "Visual Kinship". History of Anthropology Review (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "C. G. Seligman". therai.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ 11.0 11.1 11.2 11.3 "What Do Our Gender Symbols Really Mean? | UMKC Women's Center". info.umkc.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ "Gender Identity & Roles | Feminine Traits & Stereotypes". www.plannedparenthood.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ "Planet symbols", Wikipedia (in ஆங்கிலம்), 2019-04-07, பார்க்கப்பட்ட நாள் 2019-04-29
- ↑ "Venus" (in en). https://www.ancient.eu/venus/.
- ↑ "Venus", Wikipedia (in ஆங்கிலம்), 2019-04-16, பார்க்கப்பட்ட நாள் 2019-04-29